கொரொனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கூறி துரைமுருகன் மீது வழக்குப்பதிவு..!
கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு எதிராக வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதது, கூட்டம் கூடியது, தொற்று பரவும் வகையில் செயல்பட்டது, பேரிடர் கால விதி மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உட்பட வேலூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





