--- --:--:-- --

தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை..!

3

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் இருப்பதாக பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

எனவே தமிழகம், கேரளா ,மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இப்போது இடைத்தேர்தலில் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டமன்ற தொகுதிகள் காலி என அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பது விதி.

 

ஆனால் முடிவில் மாற்றம் செய்து தேர்தல் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள மூன்றாவது சட்ட மன்ற தொகுதியான சேப்பாக்கத்திலும் இடைத் தேர்தல் நடைபெறாது என்பது உறுதியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon