--- --:--:-- --

சேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கை முடித்து அதிமுகவுக்கு அளிக்கப்பட்டுள்ள பரிசு..!

6

சேகர் ரெட்டிக்கு எதிரான ஊழல் வழக்கை ஆதாரம் இல்லை என முடித்து வைத்து அதிமுகவுக்கு பாஜக பரிசு அளித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் துண்டுச் சீட்டை வைத்து துப்பு துலக்கும் ஆற்றல் படைத்த சிபிஐ சேகர் ரெட்டிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் எந்த வகைகளில் இருந்து கொடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

 

ஒரு வங்கி அதிகாரியை கூட வழக்கில் ஏன் குற்றவாளியாக சேர்க்க வில்லை என உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவுக்கு ஒரு விசாரணையை நடத்திய இப்படி ஒரு சிறப்பு கிடைத்திருக்கிறது என்றால், இந்த பரிசு வழங்கியது சிபிஐ என்ற அமைப்பு என்பதைவிட மத்திய பாஜக அரசு தான் என அடித்துச் சொல்ல முடியும் என ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

 

அன்புநாதன் விவகாரம், குட்கா டைரி, ஆர்கேநகர் தேர்தல் முறைகேடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, கொடநாடு கொலைகள் உள்ளிட்ட அனைத்திலும் இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையிலான இந்த அரசை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுவது ஏன் எனவும் வினவியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon