தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகள் தொடக்கம்..!
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் நடமாடும் ரேஷன் கடைகளை தொடங்கியிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் பேசிய அவர் தமிழகத்தில் விவசாயிகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உரங்கள் தடையின்றி கிடைப்பதாக கூறினார்.
பொது மக்களை தேடி சென்று பொருட்கள் வழங்கவே நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்பட இருப்பதாக கூறிய அமைச்சர் தமிழகத்தில் படிப்படியாக ரேஷன் கடைகள் மூடப்படுவதாக கூறுவது தவறானது என்றார்.






