ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்ட்ராய்டு போன்..!
மதுரையில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பில் புதிதாக சேரும் மாணவர்களுக்கு விலையில்லா ஆண்டிராய்டு செல்போன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
வசந்த நகரில் உள்ள தியாகராஜர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா ஆண்ட்ராய்டு செல்போன் வழங்குவதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், ஆன்லைன் மூலம் நடைபெறும் வகுப்புகளில் மாணவர்கள் பங்கேற்கும் வகையிலும் செல்போன் வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.






