தமிழகத்தில் இன்று 5981 பேருக்கு கொரோனா தொற்று…! உயிரிழந்தோர் 109 பேர்..!! மொத்த பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,981 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழப்பு இன்றும் நூறைக் கடந்து 109 ஆக உயர்ந்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த ஒரு மாதமாகவே ஏற்றம் இறக்கமின்றி ஒரே மாதிரியாக தினசரி பாதிப்பு 6 ஆயிரத்திற்குள்ளும், உயிரிழப்பு 100 என்ற அளவிலும் பதிவாகி வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 5981 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4 லட்சத்தை தாண்டி 4,03242ஆக உயர்ந்துள்ளது. இன்றும் உயிரிழப்பு நூறைக் கடந்து 109 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 6,948 ஆக உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5870 ஆகும். தற்போது சிகிச்சையில் 52364 பேர் உள்ளனர்.
சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்தே பதிவாகி வருகிறது. நேற்று 1290 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்றைய பாதிப்பு மேலும் அதிகரித்து 1286 ஆக பதிவாகியுள்ளது.
இன்றும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் அதிகபட்சமாக 439 பேருக்கும், சேலத்தில் 413 , கடலூரில் 261, திருவள்ளுரில் 323, செங்கல்பட்டில் 298, காஞ்சிபுரம் 256, என மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகியுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, சேலம் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





