இளஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்துள்ளது..!
அமெரிக்கா, உக்ரைன் நாடுகளில் விளையும் இளஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை கொடைக்கானலில் விளைவித்து விவசாயி ஒருவர் அசத்தியுள்ளார்.
செல்லபுரம் பகுதியை சேர்ந்த சிவா என்பவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியிலிருந்து இளஞ்சிவப்பு நிறம் கொண்ட உருளைக் கிழங்கு விதைகளை வாங்கி வந்து ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டார்.
தற்போது மழை போதுமான அளவு பெய்துள்ளதால் இளஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு அமோக விளைச்சல் அடைந்துள்ளது எனவும் இந்த வகை உருளைக்கிழங்குகள் அறுவடை செய்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும் விவசாயி கூறியுள்ளார்.






