விநாயகரை கரைக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!
கோபிசெட்டிபாளையம் அருகே கீழ்பவானி வாய்க்காலில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நடுபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ரூபின் ராஜ் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு முடிந்து கீழ்பவானி வாய்க்காலில் சிலையை கரைக்கு சென்றுள்ளார். அப்போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான வரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் 3 நாட்களுக்கு பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வாய்க்கால் ஓரம் மரக்கிளையில் சிக்கி உயிரிழந்தவரை சடலமாக மீட்டனர்.
கீழ் பவானி ஆற்றில் பாசனத்திற்காக அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நீச்சல் தெரிந்து இருந்தும் மாணவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனிடையே உயிரிழப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





