விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின்..!
விமான நிலையங்களை தனியார் மயமாக்குவதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் கருத்து கூறியிருக்கும் அவர் விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.
2003 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி தனியார் மயமாக்குவது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதால் உடனடியாக இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





