சந்திரயான் -2 விண்கலம் படம் பிடித்துள்ள சாராபாய் பள்ளம்..!
சந்திரனில் உள்ள சாராபாய் பள்ளத்தை சந்திராயன் 2 விண்கலம் படம்பிடித்து அனுப்பியுள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோவால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்கலம் சாரா பாய் பள்ளத்தை முப்பரிமாணத்தில் மிகத் தெளிவாக படம் எடுத்து அனுப்பியுள்ளது.
சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டரிலிருக்கும் டைரன் மேபிங்க் கேமரா மூலம் நிலவின் வடகிழக்கு பகுதியில் உள்ள பள்ளம் கடந்த மாதம் படம் பிடிக்கப்பட்டது. இந்த பள்ளத்துக்கு இந்திய விண்வெளித் துறையின் தந்தையான விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பெயர் ஏற்கனவே சூட்டப்பட்டது.
சாராபாய் பள்ளம் படம் பிடிக்கப்பட்ட தகவலை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங், விக்ரம் சாராபாயின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கடந்த 12ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் இந்த படம் அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.






