தமிழகத்தில் மதுக்கடைகளில் நேற்று ஒரு நாள் விற்பனை 248 கோடியே 10 லட்சம் ரூபாய்..!
தமிழகம் முழுவதும் நேற்று மதுக்கடைகளில் 248 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. இன்று சுதந்திர தினம் என்பதால் நாடு முழுவதும் மது கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தை பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் அமலில் உள்ளது.
இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்பதால் நேற்று தமிழகம் முழுவதும் அதிக அளவில் மது வகைகள் விற்பனை ஆகின. நேற்று அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 56 கோடியே 45 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.
திருச்சி மண்டலத்தில் 55 கோடியே 77 லட்சம் ரூபாய்க்கும், சேலத்தில் 54 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு மது வகைகள் விற்கப்பட்டுள்ளன. கோவை மண்டலத்தில் 49 கோடியே 78 லட்சம் ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் 31 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கும் மதுக்கடைகளில் விற்பனை நடைபெற்று உள்ளது.
ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு கடந்த ஏழு வாரங்களிலேயே அதிகபட்சமாக நேற்று தான் 248 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு மது வகைகள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





