வீட்டில் ஏசி வெடித்து விபத்து..! 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின..!
சென்னை அருகே அடுக்குமாடி குடியிருப்பில் ஏசி திடீரென வெடித்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரத்தை அடுத்த ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள நவீன் குமார் என்பவரது வீட்டில் இந்த விபத்து நடந்துள்ளது. அவரது உறவினர் சபரிநாதன் வீட்டின் கதவைத் திறந்து மின் விளக்கை இயற்றியுள்ளார்.
அப்போது வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி வெடித்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. இதில் நவீன்குமார் லேசான காயங்களுடன் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு விபத்துகள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





