--- --:--:-- --

கொரொனா வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..!

1

அச்சங்குடி அருகே கரோனோ வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலம் ஏற்றி வந்த ஆம்புலன்ஸ கவிழ்ந்து விபத்து டிரைவருக்கு லேசான காயம். கவிழ்ந்த ஆம்புலன்ஸ்க்குள்ளேயே பாடி இருந்ததால் பரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அச்சங்குடியில் அதிகாலை 4.45 மணி அளவில் மதுரை தனியார் மருத்துவமனையில் இருந்து கரோனோ நோயால் பாதிக்கப்பட்டு இறந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 55 வயது முதியவரின் சடலத்தை ஏற்றிக்கொண்டு தேனி மாவட்டம் அல்லிகுளம் பதியை சேர்ந்த ஐயப்பராஜா ஆம்புலன்ஸ் ஓட்டி வந்துகொண்டிருந்தார்.

 

அப்போது நிலைதடுமாறி அச்சங்குடி அருகே மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் டிரைவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.ஆம்பளன்ஸ் குள்ளேயே கரோனோ வைரஸ் தொற்றால் இறந்தவரின் சடலம் இருந்ததால் ஒருவித அச்சத்துடன் மக்கள் யாரும் நெருங்கவில்லை.

அதனால் அங்கு பரபரப்பு கூடியது. பின்னர் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் ஜிப்ரி மற்றும் சமூக ஆர்வலர்கள் வந்து உடன் கரோனோ வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவரின் உடலை மீட்டு கோட்டைப்பட்டினம் கொண்டுசென்றனர்.இதுகுறித்து திருவாடானை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon