பெள்ளாதியில் ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை.எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ், முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் பூபதி உள்ளிட்டோர் இன்று துவக்கி வைத்தனர் !!!
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெள்ளாதி ஊராட்சியில் இன்று ரூ.71 லட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.ஓ.கே.சின்னராஜ், முன்னாள் எம்.பி.ஏ.கே.செல்வராஜ்,ஊராட்சி மன்ற தலைவர் பூபதி (எ) குமரேசன் உள்ளிட்டோர் இன்று பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் தேரம்பாளையம் முதல் மொங்கம்பாளையம் வரையிலான தார் சாலை அமைக்கும் பணி,ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி பொது நிதியில் இருந்து தேரம்பாளையம் முதல் மொங்கம்பாளையம் வரை குடிநீர் குழாய் அமைக்கும் பணி,ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் படிப்பகம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை செய்யப்பட்டு இன்று துவக்கி வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட கவுன்சிலர் பி.டி.கந்தசாமி,ஒன்றிக்குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன்,ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதீசன்,சாமிநாதன்,ரத்தினம்,ஒப்பந்ததாரர்கள் மோகன் ராஜ்,ராமமூர்த்தி,ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அமுதா,வார்டு உறுப்பினர்கள் கார்த்திக்,செந்தில்,விஜயலட்சுமி,பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.