இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள தொண்டியை சேர்ந்தவர் ஜெகநாதன் (75) இவர் தொண்டியில் நகை கடை வைத்துள்ளார். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இன்று இரவு 7 மணிக்கு மருத்துவமனையிலிருந்து வீட்டிற்க்கு திரும்பிய சிறிது நேரத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அருகில் உள்ள டாக்டரிடம் பரிசோதனை செய்ததில் ஜெகநாதன் இறந்தது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்றில் இறந்தவரை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொண்டி தமுமுகவினர் அடக்கம் செய்ய முன் வந்தனர். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இந்துவின் சடலத்தை தமுமுகவினர் அடக்கம் செய்தது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது. தமுமுக மாநில செலாளர் சாதிக் பாட்சா, மாவட்ட செயலாளர் ஜிப்ரி உட்பட பலர் உடன் இருந்தனர்.