சூப்பர் ஸ்டார் “ரியாக்சன்” எப்பவுமே லேட்டானாலும் லேட்டஸ்ட் தான் போலும்..! “கந்தனுக்கு அரோகா” என டுவீட் போட்ட ரஜினி!!

கந்த சஷ்டி கவசத்தையும், இந்து கடவுள்களையும் இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற ஒரு இந்து விரோத கும்பல் யூட்யூப்பில் வெளியிட்ட வீடியோ தமிழகத்தில் பெரும் சர்ச்சையானது. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கொந்தளித்து போராட்ட்த்தில் குதித்தனர். இதனால் ஆளும் அதிமுக அரசு வேறு வழியின்றி, வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டத்தின் மீது விறுவிறுவென நடவடிக்கைகளை மேற்கொண்டது.

 

இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டு கறுப்பர் கூட்ட அலுவலகம் சீல் வைக்கப்பட்டு, யூட்யூப்பில் இருந்து சம்பந்தப்பட்ட வீடியோக்களும் அகற்றப்பட்டுள்ளன.

 

இந்த விவகாரத்தில் கறுப்பர் கூட்டத்துக்கு ஆதரவாக இருப்பதாக திமுக மீதும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டுகள் எழ, திமுக தரப்பில் மறுப்பு வெளியானது. மேலும் முருகரை இழிவுபடுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது என திமுகவும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் திமுகவை இந்து விரோதிகள் போல் சித்தரிக்க சதி எனவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார்.

 

கந்த சஷ்டி விவகாரம் புயலென வீசி தற்போது ஓரளவுக்கு ஓய்ந்துள்ள நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கம் போல ரொம்ப ரொம்ப லேட்டாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார். இதில் கறுப்பர் கூட்டத்தை சாடியும், தமிழக அரசின் நடவடிக்கைகளை ஆகா ஓகோ என பாராட்டியும் ரஜினி பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் ரஜினி கூறியிருப்பதாவது:

 

கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்கச் செய்த இந்த ஈனச்செயலை வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காக தமிழக அரசுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேஷமும் கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்… ஒழியணும்.

 

எல்லா மதமும் சம்மதமே!!!
கந்தனுக்கு அரோகரா!!!

 

ஸ்டெர்லைட் விவகாரம் முதல் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து தாம் பேசிய கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தது உள்பட பல்வேறு அதி முக்கிய விவகாரங்களில் ரஜினியின் ரியாக்சன் ரொம்ப லேட்டாகவே இருந்து வருகிறது. ஆனால் கூறும் கருத்து லேட்டஸ்ட் என்பது போல ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்னா மாதிரி நச் வாக்கியமாக அமைவதால் பரபரப்பாக பற்றிக் கொள்கிறது. அப்படித்தான் கந்தனுக்கு அரோகரா என ரஜினி போட்ட கோஷத்தையே ஹேஸ்டேக்காக்கி அவரது ரசிகர்கள் உற்சாகமாக சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

 

 

 

 


Leave a Reply