ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே அவருடைய மனைவி, மகனுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி சிகிச்சையில் உள்ள நிலையில் தற்போது தங்கப்பாண்டியனுக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை மட்டும் 17 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் தப்பவில்லை.
தமிழக அமைச்சர்கள் 4 பேர், திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 12 பேர் வரை என இத்தொற்று பாதிப்புக்கு 16 பேர் ஆளாகி உள்ளனர். இதில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜு, தங்கமணி ஆகியோரும் எம்எல்ஏக்களில் பலரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டனர். திமுகவைச் சேர்ந்த சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகமும் நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
ஸ்ட்ரெச்சரில் தள்ளி செல்ல லஞ்சம் கேட்டதால் பேரன் தாத்தாவை தள்ளி சென்ற சம்பவம்..!
இந்நிலையில் ராஜபாளையம் தொகுதி திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஏற்கனவே கடந்த வாரம் தங்கப்பாண்டியனின் மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் எப்போது தங்கப்பாண்டியனுக்கு எடுக்கப்பட்ட சோதனையில் தொற்று இல்லை என உறுதியானது.
தற்போது அவருடைய மனைவி, மகன் சிகிச்சை பெற்று மீண்ட நிலையில் தற்போது தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இதுவரை 17 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.