தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்று குறைந்துள்ளது. இன்று 75 பேர் உயிரிழந்த நிலையில் சென்னையில் தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 5 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. இன்றைய கொரோ பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று 4,985 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 4965 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை, பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கைக்கு சமமாக 4894 ஆகும்.
இன்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்து உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் 7 பேர், திருச்சி, திருவள்ளூரில் தலா 6 பேர், செங்கல்பட்டில் 5 பேர் என அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இன்று சென்னையில் மட்டும் 1130 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி, சென்னை நகரில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் அதிகபட்சமாக 366, விருதுநகரில் 360 தூத்துக்குடியில் 269, காஞ்சியில் 262, கோவை 176, மதுரை | 58, குமரி 159, வேலூர் 160, திருச்சி 127 என அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை பரவலாக பதிவாகியுள்ளதாக தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.