தீபாவளி பயண நெரிசலைக் கட்டுப்படுத்த சுங்கச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக பரனூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் கடந்து செல்லும் வகையில் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுங்கச்சாவடி ஊழியர்கள் விடுப்பில் செல்லாமல் பணியில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தீபாவளி நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயணிகள் பாதுகாப்பாகவும் விரைவாகவும் தங்களது சொந்த ஊர்களைச் சென்றடையச் செய்வதே இந்த ஏற்பாடுகளின் நோக்கமாகும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




