--- --:--:-- --

ஆந்திரா கொத்தபுரம் கடற்கரையில் 4 உடல்கள் கரைஒதுங்கின – மாயமான காசிமேடு மீனவர்களா?

3

ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயமான நிலையில், 4 மீனவர்களின் உடல்கள் ஆந்திராவில் கோட்டகுப்பம் பகுதியில் கரைஒதுங்கின. ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கொத்தாபுரம் கடற்கரையில் இன்று 4 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், கரை ஒதுங்கிய இந்த உடல்கள், கடந்த 29-ஆம் தேதி மாயமான தமிழக மீனவர்களின் உடல்களா என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

 

முன்னதாக ‘முரசு’ புயல் காரணமாக கடலில் சிக்கி, காசிமேடு பகுதியைச் சேர்ந்த 9-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த சில நாட்களாக மாயமாகியிருந்தனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஆந்திரக் கடற்கரையில் 4 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனிடையே, காசிமேடு மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற படகு, கொத்தாபுரம் கடற்கரையில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கடலில் கவிழ்ந்த நிலையில் கிடப்பதை கடலோரக் காவல் படையினர் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து மீன்பிடி படகு கொத்தாபுரம் கடற்கரைக்கு இழுத்துவரப்பட்டது.

 

கடலில் மூழ்கிய படகு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கரைஒதுங்கிய உடல்கள் மாயமான மீனவர்களுடையதுதானா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், எஞ்சிய மீனவர்களைத் தேடும் பணியும் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon