சென்னை விமான நிலையத்தில் சர்வதேசப் பயணிகளுக்கும் டிஜி யாத்ரா சோதனை தொடக்கம்
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்காக டிஜி யாத்ரா (Digi Yatra) தொழில்நுட்பச் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பயணிகளின் அடையாளச் சரிபார்ப்பு மற்றும் நுழைவு நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச முனையத்தின் ஒரு நுழைவாயிலில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. முக அடையாளத் தொழில்நுட்பத்தின் மூலம் பயணிகளின் அடையாளத்தைச் சரிபார்த்து, தேவையற்ற காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்தச் சோதனை டிசம்பர் மாத இறுதி வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் கிடைக்கும் அனுபவங்களின் அடிப்படையில் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட ஏழு விமான நிலையங்களில் இதற்கான சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




