--- --:--:-- --

தீபாவளிக்கு சென்னையிலிருந்து 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

download - 2026-11-05T121606.230

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 15,659 பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.

 

பண்டிகைக் காலத்தில் பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலைக் குறைத்து, பொதுமக்கள் பாதுகாப்பாகச் சொந்த ஊர்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்துவதே இந்த ஏற்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.

 

சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் பிற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகள் ஒரே இடத்தில் குவிவதைத் தவிர்க்க 16 இடங்களில் இருந்து நேரடிப் பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon