மத்திய அரசின் 70 கேள்விகளுக்கு தடை செய்யப்பட்ட 59 செயலிகள் பதிலளிக்க உத்தரவு..!
மத்திய அரசின் 70 கேள்விகளுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளுக்கு உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிரானது என்று கூறி டிக் டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
தடையை நீக்குவது குறித்தும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளிக்கும் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன செய்தி நிறுவனங்கள் கோரி வந்தனர்.
இந்த நிலையில் அவற்றின் நிதி அமைப்பு, தரவு சேகரிப்பு செயல்முறைகள் இந்தியர்களின் தகவல்கள் எவ்வாறு சேமிக்கப் பட்டது என்பது குறித்த 70 வகையான கேள்விகளை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளதாகவும் பதில்களை உயர்மட்ட குழு ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.






