14 ஆம் தேதி தொலைக்காட்சி வாயிலாக தொடங்கப்போகும் பாடம்..! மாணவர்கள் குழப்பம்..!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டம் வருகிற 14ம் தேதி துவக்கி வைக்கப்பட உள்ளது. கொரொனா மற்றும் ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறப்பது கால தாமதமாகி வருகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தி வரும் நிலையில் இதைப் போல அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டது.
இதில் குளறுபடி ஏற்படும் என்பதால் தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வருகிற 14-ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கப்பட இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வகுப்பு வாரியாக பிரித்து மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.
ஒளிபரப்பப்படும் தொலைகாட்சிகள் மற்றும் நேரம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் இன்னும் போய் சேராத நிலையில் தொலைக்காட்சிகளில் பாடம் துவங்க இருப்பதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே குழப்பம் நிலவுகிறது.






