தங்கம் விலை உயர்ந்ததா – குறைந்ததா?
தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,025க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.255க்கும், ஒரு கிலோ ரூ.2,55,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




