--- --:--:-- --

ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர் இருந்தபோதே வெற்றி பெற்றது தி.மு.க: இடைத்தேர்தல் குறித்து துரைமுருகன் பதில்

10

இடைத்தேர்தல்களில் எப்போதுமே ஆளுங்கட்சிக்குத்தான் கூடுதல் செல்வாக்கு இருக்கும் என்ற கருத்திற்குப் பதிலளித்த தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், “ஆளுங்கட்சியாக எம்.ஜி.ஆர் அதிகாரத்தில் இருந்தபோதே, நாங்கள் அண்ணா நகர் மற்றும் மயிலாடுதுறை இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறோம்.

 

 

எனவே இடைத்தேர்தல் என்றால் ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்பது ஒன்றும் எழுதப்படாத இலக்கணம் கிடையாது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் இடைத்தேர்தலில் தி.மு.க தனது பலத்தைக் நிரூபித்து வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon