--- --:--:-- --

இன்று முதல் மாவட்ட எல்லை மூடல்! போக்குவரத்துக்கு இ – பாஸ் கட்டாயம்!

4.1

மாவட்ட எல்லைகள் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர்களுடன் நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி மாவட்டம் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக அறிவித்திருக்கிறார். கொரொனா பரவலை தடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக நாளை முதல் 30-ஆம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

 

மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது என்றால் இ பாஸ் பெற வேண்டியது கட்டாயம் என்று கூறினார். மாவட்டங்களுக்கு இடையே கார், பைக் உள்ளிட்ட தனியார் வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon