சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது உண்மை தான்!
பாலிவுட் நட்சத்திரம் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் கொலை செய்யப்பட்டதற்கான எவ்வித தடயமும் இல்லை என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்த சுஷாந்த் சிங் கடந்த 14ம் தேதி மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதாகும் சுஷாந்த் சிங் மரணத்தில் பலர் சந்தேகம் எழுப்பிய நிலையில் தற்போது வெளியாகியுள்ள இறுதிப் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தூக்கில் தொங்கியதால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் உடலில் எவ்விதக் காயமோ அல்லது போராட்டம் நிகழ்ந்ததற்கான அறிகுறியோ தென்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் கூப்பர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.






