நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பாஜகவின் தவறான கொள்கைகளே காரணம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தவறான கொள்கைகளை காரணமென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது.
லடாக்கில் சீன படைகளுடன் நிகழ்ந்த போரில் உயிர் தியாகம் செய்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பேசிய சோனியா காந்தி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில் இந்த இக்கட்டான சூழலிலும் அரசு தொடர்ந்து 17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவதாக விமர்சித்தார்.
கொரொனா வேகமாக அதிகரித்து வரும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்து இருப்பதாகவும் மாநிலங்களுக்கு கூடுதலாக ஒரு ரூபாய் கூட நிதி அளிக்கவில்லை என்றும் சோனியா சாடியுள்ளார்.






