--- --:--:-- --

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா!

9

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் ஏழு பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்மாதம் 28ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது.

 

இந்த நிலையில் அவர்களது உடல் தகுதி குறித்த அறிக்கை அளிப்பதற்காக 35 வீரர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஆரோக்கியத்துடன் இருந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, சாதாப்கான் ஆகிய மூன்று பேருக்கு ஏற்கனவே கொரொனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் நட்சத்திர வீரர் முகமது ஹபீஸ், வகாப் ரியாஸ், வக்கர் சமாத் ஆகிய 6 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும் வீரர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்பட வில்லை என கூறப்பட்டுள்ளது. நெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் 25ஆம் தேதி பரிசோதனை செய்துவிட்டு திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon