மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம்!
தமிழ்நாட்டில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன, என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட போகின்றன என்பது குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பேசியுள்ளார்.
நாளை முதல் 30ம் தேதி வரை மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ பாஸ் பெற வேண்டியது கட்டாயம். மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது என்ற ஒரு முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தளர்வு நீக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு மாவட்டங்களுக்குள் மட்டும் போக்குவரத்து மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.






