--- --:--:-- --

சாதிமறுப்பு திருமணத்தால் நடந்த கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டுள்ளார்!

1.1

உடுமலை சங்கர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கௌசல்யாவின் தந்தையை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் மற்றும் பழனியை சேர்ந்த கவுசல்யா கடந்த 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்தனர்.

 

அவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கௌசல்யாவின் குடும்பத்தினர் 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சங்கர், கௌசல்யா மீது நட்ட நடு சாலையில் பட்டப்பகலில் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் சங்கர் உயிரிழந்ததை அடுத்து கௌசல்யா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

 

தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து 2016 ஆம் ஆண்டு திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது,கௌசல்யாவின் தாய், தாய் மாமன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார் ஆகியோரை விடுவித்து தூக்கு தண்டனையை எதிர்த்து கௌசல்யாவின் தந்தை சின்னசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

கௌசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ததோடு அவரை வழக்கிலிருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும் ஜெகதீசன், தமிழ்வாணன், செல்வகுமார், மணிகண்டன், மதன் ஆகிய ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. கௌசல்யாவின் தாய், தாய்மாமன் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டது செல்லும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon