சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
சிவகங்கை மாவட்டத்தில் கொரானா தொற்றில் பாதிக்கப்பட்டு 48 பேர்,சிவகங்கை பழைய மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரானா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 15 பேர் இன்று சிகிச்சையில் பூரண குணமடைந்த நிலையில், வீடு திரும்பினர்.

இவர்களை மாவட்ட ஆட்சியர், ஜெயகாந்தன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் வழியனுப்பி வைத்தனர். குணமடைந்து சென்றவர்களை தவிர, தற்போது மருத்துவகல்லூரி மருத்துவமனையில் 33 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






