அகரம் அகழ்வாராய்ச்சியில் தங்க நாணயம்!
கீழடி மற்றும் அதனைச் சுற்றி அமைந்துள்ள பண்பாட்டு மேடுகளை உள்ளடக்கிய கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை விரிவான அகழாய்வு மேற்கொண்டு வருகிறது. அகரம் ஊரில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியில் ஒரு தங்க நாணயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவு கொண்டுள்ளது. இதனின் எடையளவு 300 மில்லி கிராம் எடை கொண்டுள்ளது. கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள நாணயமாகும்.நாணயத்தின் முன்பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன.

பின் பக்கம் 12 புள்ளிகள் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகின்றது.இக்காசு வீரராயன் பணம் என்று பொதுவாக அழைக்கப்பட்டுள்ளது.






