கொரொனாவால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்ததாக எழுந்த புகாரில் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்த சம்பவம் சென்னை தேனாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது.
கொரொனாவால் பாதிக்கப்பட்ட கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் உளவியல் ரீதியான தாக்குதலை செய்யக்கூடாது என அறிவுறுத்தினர்.