கொரோனா சோதனைக்கான புதிய உத்தி!
கொரொனா சோதனை செய்வதற்கான திருத்தப்பட்ட யுத்தியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் காய்ச்சல், சளி அறிகுறி உள்ளவர்களுக்கு சோதனை செய்ய வேண்டும். ஒருவருக்கு கொரொனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டால் அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் அறிகுறி இருந்தால் சோதனை செய்ய வேண்டும்.
கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்கள் நலவாழ்வுத் துறை அலுவலர்களின் அறிகுறிகள் உள்ளோர் கொரொனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அறிகுறி உள்ளவர்கள், மருத்துவமனைகளில் அறிகுறியுடன் இருக்கும் அனைவருக்கும் சோதனை செய்ய வேண்டும். சோதனை செய்யாததே காரணம் காட்டி பேறுகாலம் உள்ளிட்ட அவசர உதவிகளை தாமதப்படுத்தக் கூடாது.






