திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பழங்களை சாலையில் கொட்டிய விவகாரம் தொடர்பாக நகராட்சி ஆணையர் மீதான விசாரணை நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் தலைமையில் நடைபெற்றது.
கடந்த மே 12ஆம் தேதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பல வியாபாரிகள் விதியை மீறி நடந்து கொண்டதாகக் கூறி வாணியம்பாடி நகராட்சி ஆணையராக இருந்த சிசில் தாமஸ் வண்டியை கவிழ்த்து சாலையில் பழங்களை கொட்டினர்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆணையர் சிசில் தாமஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மேல்விஷாரம் நகராட்சியில் பணிபுரிந்து வந்த பொறியாளர் பாபு வாணியம்பாடி நகராட்சிக்கு மாற்று பொறுப்பு ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தாமஸ் மீது மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததன் அடிப்படையில் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் விஜயகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.