போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் தொழிலாளி!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னிஷ் குடித்த தொழிலாளி உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதூர் காந்தி சாலையில் உணவகம் ஒன்றில் பணியாற்றிய சுவாமிநாதன் என்பவர் மதுவிற்கு அடிமையாக இருந்த நிலையில் தற்போது கொரொனா ஊரடங்கால் மதுபானம் கிடைக்காததால் போதைக்கு மாற்று வழிகளைத் தேடினார்.

 

நேற்று இரவு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சுவாமிநாதன் அதிகாலையில் வயிற்று வலியால் துடித்து உயிர் இழந்தான். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply