சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி 10 வது வார்டு துப்புரவு பணியாளர்கள் 17 பேருக்கு 25 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான அனைத்து வகையான உணவு பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் பெட்டி நிவாரணமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் ரவி தலைமை தாங்கினார். 10 வது வார்டு செயலாளர் மாரிமுத்து, 10 வது வார்டு பகுதி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழக பொது செயலாளர் முருகேஷ் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர துணைச்செயலாளர் அமர்நாத், மாநகர மண்டல செயலாளர் ஜிம்சேகர், டி.என்.ஆர்.ஜி.டி.யு தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கதிரேசன், மணி, இளைஞர் அணி அமைப்பாளர்கள் சுரேஷ், சையத், பெருமாள் மற்றும் 10 வது வார்டு முக்கிய பொறுப்பாளர்கள் குப்புசாமி, நீதிமான்.தமிழரசு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.