--- --:--:-- --

காசியின் மூன்று நண்பர்கள் சிக்கியது எப்படி? பெண்களுக்கு அரங்கேறிய கொடுமை!

2

பண மோசடியில் ஈடுபட்ட காசி மீது தற்போது வரை 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. காசி நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரகசிய விசாரணையில் மேலும் மூன்று நண்பர்கள் சிக்குகிறார்கள். பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள காசி போலீசார் விசாரணையில் காசியின் கூட்டாளி ஒருவர் கைதாகியுள்ளார். காசியின் வேஷம் கலைந்தது எப்படி?

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேஷபுரம் பகுதியை சேர்ந்த கறிக்கோழி இறைச்சி வியாபாரி தங்க பாண்டியன் என்பவரது மகன் காசி கடையில் வியாபாரம் செய்வது, உடற்பயிற்சி கூடத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உடற்பயிற்சி மேற்கொள்வது, வழக்கறிஞர் ஒருவரின் கூடவே சுற்றுவதுதான் அவரது வாழ்க்கை என பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் சென்னை பெண் மருத்துவர் ஒருவரின் பகீர் புகாரையடுத்து காசியின் உண்மையான முகம் அம்பலமாகியுள்ளது. பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்த வழக்கில் போலீசார் 26 வயதான காசியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காசியின் மறுபக்கம் மிகக் கொடூரமானது. நூற்றுக்கும் மேற்பட்ட படித்த இளம் பெண்களை ஏமாற்றி காதல் ஆசை காட்டி அதிகரிப்பதோடு அவர்களை ஆபாச படம் எடுத்து அதனை கொண்டு பண மோசடியில் ஈடுபடும் கொடூர நபர் என்கிறது காவல்துறை.

 

முகநூலில் கட்டுடல் போட்டோக்களை பகிர்ந்து போலி கணக்குகளை துவங்கி அதில் தன்னிடம் சிக்கிய பெண்களின் ஆபாச படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொண்டுள்ளார். நாகர்கோவில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய காசி ஒரு லட்சம் பணம் மற்றும் நகை மோசடி செய்ததாக கொடுத்த புகாரில் இரண்டாவது வழக்கு பதியப்பட்டது.

காவல் நிலையத்தில் டேவிட் என்பவர் காசி தன்னிடம் கந்து வட்டி மற்றும் பண மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் மூன்றாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேலும் பாதிக்கப்பட்ட 2 பெண் கொடுத்த புகாரில் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காசி மீது இரண்டு வழக்குகள் பதிவாகியுள்ளன.

 

அது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியது தொடர்பாக காசி மேல் ஆறாவது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. நான்குநேரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காசியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

 

காசி நண்பர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நிலையில் காசியில் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என பணம் கேட்டு மிரட்ட உதவியாக இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

 

இந்நிலையில் காசியின் மோசடிகளுக்கு துணைநின்ற நண்பர்கள் 3 பேர் போலீசாரின் தீவிர விசாரணையில் உள்ளனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்ய வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

 

போக்சோ, கந்துவட்டி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட மீதமுள்ள வழக்குகளில் காசியை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டு வருகின்றனர். சுற்றி திரிந்த அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நண்பர்கள், குடும்ப பெண்களையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் தனது ஆபாச வலையில் சிக்க வைத்து மோசடி செய்த அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon