டாஸ்மாக் திறந்த முதல் நாளிலேயே தமிழகத்தில் படுகொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வீட்டை எழுதித் தர மறுத்ததால் தனது தாயை மதுபோதையில் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடந்துள்ளது. இதேபோல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்ட முதல் நாளிலேயே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று சம்பவங்கள் அரங்கேறின.

 

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டு குலத்தை சேர்ந்த ஜெயமணி, ராஜாமணி தம்பதிக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அந்த தம்பதி தங்களது இரண்டு மகள்களுடன் செட்டிகுளம் பகுதியில் தங்கியிருந்தன. இதுபோன்ற சூழலில் அங்கு வந்து ஜெயமணி, ராஜாமணியின் மகன் ராஜன் தனது தாயார் வசித்து வரும் வீட்டை தனது பெயரில் எழுதி வைக்கும்படி தகராறு செய்துள்ளார்.

 

அதற்கு தாயார் மறுப்பு தெரிவிக்கவே அவரை டாஸ்மாக்கில் மது வாங்கி வயிறு முட்ட குடித்துவிட்டு வரதராஜன் அரிவாளால் வெட்டிக் கொன்றார். அதனை பார்த்த அந்த தம்பதிகள் மகள்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ராஜனை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

இதேபோல் திருச்சி வாழவந்தான் கோட்டை பகுதியில் மது அருந்திவிட்டு வந்த இரு பிரிவினர் மோதிக்கொண்டனர். தேங்காய் பரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை நீருபூத்த நெருப்பாக இருந்து கொண்டிருந்த தருணத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படதால் அங்கு அந்த இரு தரப்பினருக்கும் சண்டை மோதலில் முடிந்தது. இதில் மூன்று பேரின் மண்டை உடைந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் 13 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். மது அருந்தும் போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்துள்ளன. இதில் காயமடைந்த ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது மற்றொரு தரப்பினரும் வந்து அவரை தாக்கியுள்ளனர். காவல்துறைக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிவிட்டனர்.


Leave a Reply