தந்தையின் நினைவாக வைத்திருந்த பைக் திருடப்பட்டதால் தற்கொலை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தனது தந்தையின் நினைவாக வைத்திருந்த தன்னுடைய இருசக்கர வாகனம் திருடு போனதால் 21 வயது இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. பொல்லாதவன் திரைப்படத்தில் விரும்பி வாங்கிய பைக் தனுஷ் நண்பனாக நேசிக்கப்படும்பைக் திருடு போனதாக கதை அமைக்க பட்டு இருக்கும்.

 

அதைப்போல தனது தந்தை வாங்கிக் கொடுத்த பைக் திருடு போனதால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த இளைஞர் சென்னை புரசைவாக்கம் தாண்டவராயன் தெருவை சேர்ந்த 21 வயதான தியாகராஜன். பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த தியாகராஜன் செல்போன் கடையில் பணிபுரிந்து வந்தார். இவரது தந்தை ரவிச்சந்திரன் வெல்டர் ஆக பணிபுரிந்து வந்தார்.

 

தாய் மீனாட்சி உடல் நலமின்றி சில ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். மகன் ஆசைப்பட்டார் என்பதால் தங்க சங்கிலியை விற்று ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கு உயர் ரக பைக்கை 2019ஆம் ஆண்டு வாங்கி கொடுத்துள்ளார். அவரது தந்தை ரவிச்சந்திரன்பைக் வாங்கிக் கொடுத்த சில மாதங்களில் ரவிச்சந்திரன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவரது நினைவாக தனது இரு சக்கர வாகனத்தை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்துள்ளார். நெருங்கிய நண்பர்கள் ஆனாலும் அவர்களை வண்டியில் ஏற்றமாட்டார். கீறல் விழுந்தாலும் உடனே சரி செய்தும் வந்துள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் ஐந்தாம் தேதி தியாகராஜனின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

 

இதுதொடர்பாக வேப்பேரி காவல் நிலையத்தில் தியாகராஜன் புகார் அளித்துள்ளார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தியாகராஜனின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி களில் பதிவானது தெரியவந்தது. அப்பாவின் நினைவாக பாதுகாத்து வந்த இருசக்கர வாகனம் திருடு போனதால் மன உளைச்சலில் கிடந்த தியாகராஜன் 10 நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

குடும்பத்தினர் அவரை மீட்ட நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒரு நான்கு இடங்களில் பாதுகாப்பு பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க கால தாமதம் ஆகியுள்ளது. போலீசார் எப்படியாவது தனது இரு சக்கர வாகனத்தை மீட்டுக் கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்த தியாகராஜன் விரக்தியடைந்து சுற்றியுள்ளார்.

புரசைவாக்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டில் இருந்த தியாகராஜன் யாரும் இல்லாதபோது புதன்கிழமை நண்பகலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தியாகராஜனின் தற்கொலை குறித்து வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பாவின் நினைவாக தான் வைத்திருந்த இருசக்கர வாகனம் திருடு போனதால் மனமுடைந்த இளைஞர் வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply