தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் வெப்ப சலனத்தால் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது. மாலத்தீவு லட்சத் தீவு பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் 7 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 5 சென்டி மீட்டரும், தக்கலை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Leave a Reply