வீரமரணமடைந்த சந்திர சேகரின் உடல் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் சந்திரசேகரின் உடல் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. குத்வாராவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் கடந்த 4ஆம் தேதி சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார் .

 

அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் மூன்று வாய்க்காலுக்கு இராணுவ மரியாதையோடு உடல் கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் மக்கள் மரியாதை செலுத்தினார். அமைச்சர் ராஜலட்சுமி மாவட்ட ஆட்சியர் சுந்தர் தயாளன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா ஆகியோர் வீரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தின. ர்ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க சந்திரசேகரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


Leave a Reply