மது வாங்க ஆதார் கட்டாயம்!
டாஸ்மாக் கடைகளில் மது வாங்க ஆதார் கட்டாயம் என்ற நிபந்தனையை தளர்த்த கோரி டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை திறக்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் மது விற்பனைக்கு கடும் நிபந்தனைகளை விதித்தன.
அதில் ஒன்றுதான் மது வாங்க ஆதார் அட்டை கட்டாயம் என்ற விதிமுறை. இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறக்க தடை கோரி வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான வழக்கறிஞர் ராஜேஷ் காணொளி மூலம் நீதிபதிகளிடம் கூடுதல் முறையீடு ஒன்றை வைத்துள்ளார்.
மதுபானம் வாங்க அதிக அளவு கூட்டம் கூடுவதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்ட அளவைவிட கூடுதல் எண்ணிக்கையில் மதுபாட்டில்கள் விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
அதற்கு அரசு தரப்பில் பலரிடம் ஆதார் இல்லை மது வாங்க ஆதார் கட்டாயம் என்பதில் இருந்து விலக்கு அளிக்க கோரி டாஸ்மாக் தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த கோரிக்கைகள் அனைத்தையும் வரும் 14-ஆம் தேதி விசாரிப்பதாக தெரிவித்த வழக்கை ஒத்திவைத்தனர்.






