ஊரடங்கு முடிந்த பிறகு பேருந்துகள் எவ்வாறு இயக்கப்படும்?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்குவது மற்றும் அது தொடர்பான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது. அதில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க வேண்டும் என்று, 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும்.

 

பேருந்தில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனி வழியை கடைபிடிக்கவேண்டும், குளிர்சாதன பேருந்துகள் தவிர்க்க வேண்டும்.,ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகு பேருந்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும், முக கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் ஏற்றக்கூடாது, பேருந்தில் பயணிகளிடையே சமூக இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 

பேருந்துக் கட்டணங்களை மொபைல் செயலி மூலம் பெறும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஒவ்வொரு முறையும் பணிக்கு செல்லும் முன் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

 

முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து இருக்க வேண்டு.ம் மேலும் நடத்துனர் இடத்தில் கையை சுத்தப்படுத்துதல் கிருமி நாசினி கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Leave a Reply