மும்பையில் இருந்து திரும்பிய மகன்! மாட்டுக் கொட்டகையில் தங்க வைத்த தாய் !

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மும்பையிலிருந்து திரும்பிய மகனை வீட்டிற்குள் நுழைய விடாமல் இரவு முழுவதும் மாட்டுக் கொட்டகையில் தங்கவைத்த தாயார் விடிந்ததும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி எனும் கிராமத்தில் நிகழ்ந்துள்ளது.

 

காய்கறி லாரி மூலம் மும்பைலிருந்து நிலக்கோட்டை திரும்பிய மகனும் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த இரண்டாவது மகனும் தற்போது திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊருக்குள் கொரொனா பரவி விடக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன் செயல்பட்ட தாய்க்கு அப்பகுதி மக்களும் சுகாதாரத் துறை யினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


Leave a Reply