--- --:--:-- --

ரஷ்ய பிரதமருக்கு கொரோனா பாதிப்பு !

4

ரஷ்ய பிரதமர் மேக்கேல் மிசூஸ்டினை கொரொனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே அதிபர் புதினிடம் தெரிவித்தார். சீனாவில் தொடங்கிய கொரொனா வைரஸ் உலக அளவில் சுமார் 200 நாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்ச பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தலைவர்களையும் கொரொனா விட்டுவைக்கவில்லை.

 

பிரிட்டன் இளவரசர் சாள்ஸ், பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் கொரொனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தனர். இதேபோல் பிரிட்டிஷ் சுகாதாரத்துறை அமைச்சர் நடின், டோரிசும் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டார்.இஸ்ரேல் சுகாதாரத் துறை அமைச்சர் யாகோ லிஷ்மெனுக்கு கொரொனா உறுதியானதால் பிரதமர் பென்ஜமின் தன்னைத் தானே இரண்டு முறை தனிமைப் படுத்திக் கொண்டார்.

 

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோஃபிக்கு கொரொனா உறுதியானதை அடுத்து அவர்கள் இருவரும் இரு வாரத்திற்கு தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டனர். இதேபோல் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா சந்தித்த மருத்துவர் ஒருவருக்கு கொரொனா உறுதியானதால் அவரும் தன்னை இரண்டு வாரங்களுக்கு தனிமைப் படுத்திக் கொண்டார்.

 

ஸ்பெயின் துணைப்பிரதமர் கார்மெண்ட் கால் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இவர்கள் தவிர ஈரான் துணை அதிபர் இஷான் ஜஹாங்கீர் சுகாதாரத் துறை துணை அமைச்சர் இராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற சூழலில் தற்போது ரஷ்ய பிரதமர் மிக்கேல் மிசூஸ்ட்டினுக்கு கொரொனா தொற்று இருப்பதை அவரே உறுதி செய்துள்ளார்.

 

இந்த தகவலை அதிபர் புதினுக்கு தெரியப்படுத்தி இருக்கும் நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார். அவருக்கு பதிலாக துணைப்பிரதமர் மற்றும் பிரதமரின் பொறுப்புகளை கவனித்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon