கொரொனா வைரச சீனா பரப்புனத்துக்கு ஆதாரம் இருக்கு – டிரம்ப்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவின் வூகான் நகரில் உள்ள ஆய்வுக்கூடத்தில் தான் கூர்ண வைரஸ் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரம் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வூகான் நகரிலுள்ள தொற்றியல் நிறுவனத்தில் இருந்து தான் கொரொனா வைரஸ் பரவியது என்பதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு ஆம் என்று பதிலளித்த டிரம்ப், ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு இருப்பதற்கான போதிய ஆதாரம் உள்ளது என்று உறுதிபட தெரிவித்தார். அதை எப்படி உறுதியாக கூறினீர்கள் என்று செய்தியாளர் கேட்ட போது அந்த விவரத்தை தற்போது கூற முடியாது என்று டிரம்ப் மறுத்துவிட்டார்.

 

அமெரிக்காவில் வேலை வாய்ப்பு இல்லாதவரின் எண்ணிக்கை 3 கோடியாக அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான அரசின் பலன்களை பெற கடந்த மார்ச் மாதம் முதல் ஏராளமான அமெரிக்கர்கள் பதிவு செய்து வருகின்றனர். கடந்த 25ஆம் தேதி வரை 3.3 கோடி பேர் தங்களுக்கு வேலை இல்லை என்று பதிவு செய்துள்ளனர்.

 

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு வேலை இழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரொனாவால் போடப்பட்டபோது முடக்கம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளன. பல நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் பலரும் வேலை இழந்துள்ளனர்.

 

ஏப்ரல் மாதத்தில் மட்டும் வேலைவாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை 14 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு இது மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.


Leave a Reply