--- --:--:-- --

விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் ட்ரம்ப்!

1

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேசும் ஒவ்வொரு சொல்லும் உலக அளவில் கவனம் பெறும். அதே அளவில் சர்ச்சைக்குள்ளான தாகவும் மாறும். சமீபத்திய அவரது பேச்சுகள் அரசியல் உலகத்தைத் தாண்டி அறிவியல் உலகத்தையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றன. மருத்துவத்தைப் பற்றிய அதிகமான அறிவு தமக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது என்கிறார் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப்.

 

சந்தேகமேயில்லாமல் இது தற்பெருமை தான். கொரொனா பரவத் தொடங்கிய பிறகு அது தொடர்பாக மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் பல்வேறு தகவல்களை கூறி வரும் நிலையில் டொனல்டு டிரம்ப்பின் இதுபோன்ற பேச்சு அதிகரித்துள்ளது. மருத்துவர் இல்லை என டொனல்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

 

ஆனால் அவரது பேச்சு மருத்துவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் போட்டியாகவே அமைந்துள்ளது. கொரொனா பாதிப்பு உள்ளவர்கள் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்தை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியதும் அதற்கு அவரைச் சார்ந்தவர்களே மறுப்பு தெரிவித்தார்கள். கிருமிநாசினி கொரொனாவை கொல்லும் என்றால் அதை நோயாளிகளின் உடலில் செலுத்தி விடலாம் என சில நாட்களுக்கு முன் கூறியது அறிவியல் உலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கிருமிநாசினி குடிக்கலாமா என்று கேட்டு சுகாதாரத் துறைக்கு மக்கள் போன் செய்ய தொடங்கி விட்டார்கள் . பின்னர் அது நகைச்சுவையாக குறிப்பிட்டதாக கூறி டொனல்டு டிரம்ப் தப்பித்து விட்டார். அதற்குள்ளாகவே சமூகவலைதளத்தில் அவரை கடுமையாக கேலி செய்து முடித்துவிட்டனர்.

 

கொரொனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான உபகரணங்கள் அமெரிக்காவில் போதுமான அளவு இல்லை என்று உலக அளவில் அறியப்பட்ட மருத்துவ விஞ்ஞானிகளும், வெள்ளை மாளிகையில் குழுவில் அங்கம் அளிப்பவருமான அந்தோணி கூறியபோது அதெல்லாம் இல்லை என்று நேரடியாகவே மறுத்து விட்டாராம் டொனல்டு டிரம்ப்.

 

அறிவியலுக்கு சவால் விடும் டொனல்டு டிரம்ப் வழக்கம் சமீபத்தில் தொடங்கியது அல்ல. அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோதே தடுப்பூசி போடும் பழக்கத்தை சாடியுள்ளார். பருவநிலை மாற்றம் என்பது சீனாவின் சதி திட்டம் என்று கூறியுள்ளார். அதிபரான பிறகு பருவநிலை மாற்ற உடன்பாட்டில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார்.

 

அறிவியலுக்கு எதிராகப் பேசும் அதிபரை அமெரிக்கா இதுவரை பார்த்ததில்லை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். நிலாவில் தரையிறங்கினோம், செவ்வாயில் தடம் பதித்தோம், சூரிய மண்டலத்தை கடந்தோம் என அறிவியலை கொண்டே கட்டமைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு அதை கடுமையாக எதிர்க்கும் அதிபர் அமைந்து இருப்பது முரண்பட்ட காலம் தான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon